Breaking News

Saturday, November 29, 2014

CUTE


























Read more ...

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?



காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.
Read more ...

CHICKEN 65

சிக்கல் - 65
ஜிலீரிட வைக்கும் சிக்கன் ரிப்போர்ட்!


சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!

சமீபத்தில் 'சென்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிராய்லர் கோழிகள் வளர்ப்பில் டெட்ராசைக்ளின், ஃப்ளோரோகைனோலோன், அமினோக்ளைக்கோசைட் உள்ளிட்ட அதிகப்படியான ஆன்டிபயாடிக் அந்தக் கோழிகளுக்குச் செலுத்தப்படுகிறது. இத்தகைய கோழிகளை உணவாக எடுத்துக்கொள்பவர்களுக்கும் அதிகப்படியான ஆன்டிபயாடிக் உடம்பில் தங்குகிறது. இது, பல்வேறு சிகிச்சைகளுக்காக நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வேலை செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது’ எனும் அந்த அறிக்கை, 'கோழிகளை சமைப்பதால் அதன் உடம்பில் உள்ள ஆன்டிபயாடிக் அழிந்துவிடாது’ என்றும் அதிர்ச்சி கிளப்புகிறது.



பிராய்லர் கோழிகளுக்கு பெயர் போன நாமக்கல்லில் பிராய்லர் கோழி வளர்க்கும் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தன் பெயர், அடையாளங்களைத் தவிர்த்துப் பேசியவர், ''நாங்க பெரிய கோழி கம்பெனிகளுக்காக ஒப்பந்த முறையில கோழிகளை வளர்த்து தர்றோம். அவங்க குஞ்சு கோழியோட, மக்காச்சோளம், சோயா, கருவாடு, உப்பு, கடலைப் புண்ணாக்குனு கோழிகளுக்கான தீவனங்களோட இன்னும் சில மருந்துகள் கலந்து உலர்தீவனமா மூட்டையில கொண்டுவந்து இறக்குவாங்க. அதைப் பிரிச்சு கோழிகளுக்குக் கொடுப்போம். 35 - 42 நாள்ல வளர்த்து உரியவங்ககிட்ட ஒப்படைச்சுடுவோம். 42 நாள் கோழி, தன்னோட வாழ்நாள்ல 3 கிலோ 600 கிராம் தீவனத்தை சாப்பிட்டிருக்கும். பிராய்லர் கோழியை கறிக்கோழினு சொல்வோம். இது கறிக்கு மட்டும்தான் உபயோகப்படும். முட்டைக்காக வளர்க்கப்படுற கோழியை லேயர்னு சொல்வோம்'' என்றவர்,

''தடுப்பூசி, குடிநீர்ல கலக்குற மருந்து இதையெல்லாம் கம்பெனிக்காரங்களே தந்துடுவாங்க. இதுபோக கோழிகளுக்கு கண்ல டிராப்ஸ் ஊத்துவோம். கோழிகளுக்கு தண்ணீர் எல்லாம் சொட்டு நீர் முறையிலதான் கொடுப்போம். அந்த தண்ணியில சில மருந்துகளையும் கலப்போம். ஆனா, இதுக்கெல்லாம் பேர் எதுவும் தெரியாதுங்க'' என்றார் வெள்ளந்தியாக!

பூப்பெய்தும் வயது... குறையும் ஆபத்து!

இப்படிப் பல ஊசிகளும், ஊட்ட மருந்துகளும் கொடுத்து வளர்க்கப்படும் இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது பற்றி, திருமானூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் காசி.பிச்சையிடம் பேசினோம்.

''ஒவ்வொரு உயிரினத்துக்குமான வளர்ச்சியை, இயற்கை தானாக அதன் உடம்பில் நிர்ணயித்திருக்கும். அப்படியிருக்க, ஒன்றரை மாதத்திலேயே ஒரு கோழி செயற்கையாக வளர்க்கப்படுகிறது என்றால், அதை சந்தேகப்பட வேண்டாமா? அந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள், மருந்துகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனாலும், க்ரோத் ஹார்மோன் எனப்படுகிற வளர்ச்சிக்கான மருந்துகளே இந்தக் கோழிகளுக்கு செலுத்தப்படுகின்றன என்பது உண்மை. குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இந்தக் கோழிகள் அடைய இதுவே காரணம். இத்தகைய கோழிகளில் சிக்கன்-65 எல்லாம் செய்து சாப்பிடுவது... நம் உடலுக்கு சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களையே கொண்டுவந்து சேர்க்கும்.

கிராமத்து நாட்டுக்கோழியை கவனித்தீர்களென்றால், அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ கணக்கில்தான் அதன் எடை இருக்கும். நம் வீட்டில், தெருவில் உள்ளதை உண்டு, ஓடியாடி, இயல்பாக வளரும் கோழி அது. அதனால் அதன் வளர்ச்சி ஆரோக்கியமாகவும் சீராகவும் இருக்கும் (இப்போது நாட்டுக்கோழியையும் கலப்பின மாற்றம் செய்து, பிராய்லர் போலவே வளர்ப்பவர்களும் பெருகியுள்ளனர் என்பது தனிக்கதை). அதேபோலதான் மனிதனின் வளர்ச்சியும் இயல்பானது, சீரானது. ஆனால், சமீப வருடங்களாக பெண் குழந்தைகள் பூப்பெய்தும் வயது 14-ல் இருந்து படிப்படியாகக் குறைந்து, இன்று 10, 9 என்று வந்து நிற்கிறது. மாதவிலக்குப் பிரச்னைகள், சீக்கிரமே ஏற்படும் மெனோபாஸ் நிலை என இவையெல்லாம் சங்கிலி விளைவுகளாகிவிடும்.

உயரம் ஊட்டத்தால் அல்ல!

ஆண் குழந்தைகளும் சட்டென ஏழடியில் வளர்ந்து நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கொஞ்சம் நின்று யோசித்தால், இப்படி வளர்ச்சி ஊசிகள் ஏற்றப்படுகிற இறைச்சி, பால் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வதால்தான் என்பது புரியும். ஆனால், நம் வீட்டுக் குழந்தைகளின் மிதமிஞ்சிய வளர்ச்சியை, உணவால் ஏற்பட்ட பிரச்னை என்று உணராமல், ஏதோ ஊட்டச்சத்தால் ஏற்பட்ட போஷாக்கு என்று நினைத்து சந்தோஷப்படுவது எவ்வளவு அறியாமை!'' என்று சொல்லி பதறவைத்த டாக்டர், இந்த வகை உணவுகளால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை இன்னும் விரிவாகப் பேசினார்.

''வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட உணவுகள் விஷயத்தில், அது பெண்களுக்கு ஏற்படுத்தும் பிரச்னைகள் பல. ஒரு கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தபோது, 'மாதவிலக்கில் பிரச்னை உள்ள பெண்கள் என்னிடம் தனியாக வந்து பேசுங்கள்’ என்று சொன்னேன். அத்தனை பெண்கள் என் அறைக்கு முன் வந்து நின்றதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்! இதற்கெல்லாம் காரணம், உணவுப் பழக்கம்தான். தவிர, அதிகப்படியான ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் தாய்மார்களின் பால் சுரக்கும் தன்மை மாறிப்போகிறது. இதனால் பால் சுரப்பு நின்றுபோகும் தாய்மார்கள் தற்போது அதிகரித்திருக்கிறார்கள். இன்னொருபுறம், இந்த உணவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சீக்கிரமே பூப்படைதல், குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே மெனோபாஸ் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன'' என்று எச்சரித்தார் டாக்டர்.

சிக்கனை, கிச்சனிலிருந்து தள்ளுங்கள்!

அசைவப் பிரியர்கள் தங்கள் உணவு முறையில் செய்யவேண்டிய மாற்றங்களை அறிவுறுத்தினார், கோவையைச் சேர்ந்த 'செக்ஸாலஜிஸ்ட்' கோமதி சின்னசாமி. ''நாட்டுக்கோழி சாப்பிட கடினமாக, சமைக்க கொஞ்சம் நேரம் எடுக்கும். அதேசமயம், அதிக வலு தருவது நாட்டுக்கோழிதான். சென்னை போன்ற மாநகரங்களில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கூடவே பிராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், சாப்பிட மிருதுவாக இருப்பதுடன் சீக்கிரமே சமைக்க முடிகிறது என்பதாலும், பிராய்லர் கோழிகளைத்தான் 


பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், பிராய்லர் கோழியில் உள்ள அதிகப்படியான கொழுப்பால், அதை சாப்பிடும் பலருக்கும் ஒபிசிட்டி ஏற்படுவது நிஜம். இன்றைய குழந்தைகள், அரை கிலோ சிக்கன்-65 உணவை தனியாளாகவே சாப்பிடுகிறார்கள். ஆனால், இந்தக் கொழுப்பைக் கரைப்பதற்குத் தேவையான உடல் இயக்கம் தராமல் டி.வி முன் உட்கார்ந்துகொள்கிறார்கள். பின் எப்படி அந்தக் கொழுப்பு கரையும்? இப்படி அதிகப்படியான கொழுப்பால்தான், பெண் குழந்தைகள் 10 வயதிலேயே பருவம் அடைகிறார்கள். இதுவே ஆண்களுக்கு, அவர்களின் ஆண் உறுப்பின் வளர்ச்சி தடைபடுகிறது. இந்தக் குழந்தைகள் வளரும்போது, இருபாலருக்கும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது'' என்று அதிர்ச்சி கொடுத்தவர், சிக்கனை உடனே விடமுடியாது என்பவர்களுக்கான டிப்ஸ் (பார்க்க: பெட்டிச் செய்தி) கொடுத்ததோடு...

''மொத்தத்தில், சிக்கனை கொஞ்சம் தள்ளி வையுங்கள்... உங்கள் கிச்சனில் இருந்து!'' என்று முத்தாய்ப்பாய் சொன்னார்.

சிக்கனை விடமுடியாது எனநினைப்பவர்களுக்கு...

 வாரம் ஒரு முறை அரை கிலோ சிக்கனை குழம்பாக வைத்து, ஆளுக்கு இரண்டு பீஸ் சாப்பிடலாம்.

 உங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால், ஆறு முதலியவற்றிலிருந்து கிடைக்கும் மீன்களைச் சாப்பிடலாம்.

 வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடலாம். இவை, கொழுப்பை குறைவாக சேமித்து வைக்கும்.

 வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்கறியில் ஹார்மோன் அபாயம் இல்லை. எனவே, மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.

 கடல் மீன்களைப் பொறுத்தவரை, ஒரே வகை மீனாக அல்லாமல் பல வகை மீன்களாக சாப்பிடலாம். மீனில் கொழுப்பு மிகக்குறைவு.

பின்குறிப்பு: குளத்து மீன் என்று சொல்லப்படுகிற நெய் மீனை (பார்க்க வழுவழுவென்று இருக்கும்) உயிரோடு நம் கண் முன்பாகவே வெட்டித் தருவார்கள். இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம். இவை, கோழியின் கழிவுகளை சாப்பிட்டு வளரும், இந்த மீனைச் சாப்பிட்டால், சரும அலர்ஜிகள் வர வாய்ப்பிருக்கிறது.

ஆன்டிபயாடிக் ஆபத்து!

கோழிகளுக்கு அதிகப்படியாக செலுத்தப்படும் டெட்ராசைக்ளின், அமினோக்ளைக்கோசைட், ஃப்ளோரோகைனோலோன் போன்ற ஆன்டிபயாடிக் எல்லாம் கோழிகள் உடம்பில் ஏற்படும் கிருமிகளை அறவே அழித்துவிடுகின்றன. இத்தகைய மருந்துகளை உட்கொண்ட கோழிகளை சாப்பிட்டால், நம் உடம்பில் உள்ள செல்களை அழிப்பது, எதிர்பார்த்திராத சைட் எஃபெக்ட்ஸ் வர வைப்பது என நம் உடம்பின் இயல்பான மாற்றத்தை, வளர்ச்சியை அது சீர்குலைத்துவிடும்!




''அதிகப்படி ஏதுமில்லை!''

சிக்கன் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாளர்களின் பதில்..?

இதைப் பற்றி பேசும் 'வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ்' நிறுவனத்தின் தமிழக துணைப்பொதுமேலாளார் டாக்டர் செல்வகுமார், ''பொதுவா எல்லா கோழி பண்ணையிலயும் இந்த மாதிரி ஆன்டிபயாடிக் சேர்க்கப்படுறதில்லை. கோழிகளை வளர்க்க சொல்லி விவசாயிகளுக்கு குஞ்சுகளா கொடுத்திருவோம். அந்தந்த ஊர்ல உள்ள வெட்னரி டாக்டர் உதவியோட கோழிகளுக்கு ஊசி போடுவாங்க. கோழிகள் வளர்ந்ததும் அதை அப்படியே வித்துட முடியாது. நாலு அல்லது அஞ்சு நாள் கழிச்சுதான் விற்பனை செய்ய முடியும். இப்படி செய்யுறப்ப கோழிக்கு எதாவது பிரச்னை இருந்தாகூட தெரிஞ்சுடும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்ல பிராய்லர் கோழிகளுக்கு கொடுக்கப்படுற டிரக்ஸ் என்ன அளவுல எப்படி கொடுக்கணும்ங்கிற மாதிரியான சார்ட் இருக்கு. அதை அரசாங்கம் எப்பவும் கவனிச்சுட்டே இருக்கும். அங்க உபயோகிக்கிற மருந்துகள் அளவைத்தான் இங்கேயும் நாங்க உபயோகிக்கிறோம். இந்தியாவுக்குனு எந்தவித அளவீடும் கிடையாது. ஆனாலும் தேவையில்லாம ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுறது கிடையாது. இந்திய பிராய்லர் கோழிகளை ஜப்பான், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி பண்றோம். அதிகப்படியான ஆன்டிபயாடிக் கொடுக்கிறதா இருந்தா, அவங்கள்லாம் தங்கள் நாட்டுக்குள்ள எப்படி அனுமதிப்பாங்க?'' என்று கேட்டார்.
Read more ...

BELLY REDUCTION

குண்டு பூசணியா நீங்கள்?இஞ்சி சாறும், பப்பாளி காயும்இருக்கையில் எதற்கு அச்சம்!

இன்றைய சூழலில், உடல் பருமன் ஒரு வகையான வியாதி. அதுமட்டுமல்ல, எல்லா வகையான 
வியாதிகளுக்கும், அதுவே வாசல். நாள்தோறும் வளர்ந்து வரும் மருத்துவ விழிப்புணர்வு காரணமாக, உடல் எடையை குறைக்க, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு முயற்சி அல்லது பயற்சியில் ஈடுபடுகிறோம்.

டயட்டீசியன்கள் கொடுக்கும், 'டயட் லிஸ்ட்'ஐ கையில் வைத்து கொண்டு சிலர், கிச்சனுக்கும், டைனிங் ஹாலுக்குமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் பலர், எந்த பயிற்சியும் செய்யாமல், 'டிவி' விளம்பரங்களில் வரும், பவுடர், மாத்திரையை நம்பி தோற்றுப் போகின்றனர்.
அதற்குப் பதிலாக, இயற்கை நமக்கு அளித்துள்ள, உணவு முறையை பின்பற்றினாலே போதும் என்கின்றனர், மருத்துவர்கள்.

அவர்கள் தரும் 'டிப்ஸ்' இது தான்:
 சாதம், இட்லி, தோசை அயிட்டங்களை தவிர்த்து, தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
 ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பழத்தை இயற்கை நமக்கு அளித்துள்ளது. அவற்றை உண்ணலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம் குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
 இரவில் உணவுக்கு பின், துாங்க செல்வதற்கு முன், பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். உணவில் தேங்காய் பயன்பாட்டை அறவே குறைக்க வேண்டும்.
 பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை அதிகளவு சேர்த்துக் கொள்வதும் நல்லது.
 இஞ்சியை இடித்து சாறு எடுத்து, அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். சாறு சற்று சுண்டியதும், தேன் விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 

40 நாளில் தொப்பை இருந்த இடம் தெரியாது.
 வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு; மூன்றில், ஏதாவது ஒன்றை தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
 இதற்கிடையில், தினமும் காலையில் அல்லது மாலையில் அல்லது இரு வேளைகளிலும், அரை மணி நேரம் நடந்தால் போதும். அப்புறம் யாரும் உங்களை 'குண்டு பூசணி' என்று சொல்ல முடியாது.
Read more ...

GOLDEN WORDS








Read more ...

SUGAR FREE LIFE

சர்க்கரை ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் 5  ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. அதற்கு 7 கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர்  மருத்துவர்கள்.

1. வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாளாவது குறைந்தபட்சம் 30 நிமிடமாவது கையை வீசி, வேகமாக நடக்க வேண்டும். இதனால் உடலில் சேரும்  சர்க்கரை குறையும்.

2. சிகரெட் குடிப்பவர்களுக்கு வழக்கமாக வரக்கூடிய நோய்கள் என்று சில இருந்தாலும், கூடுதலாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் குடிப்பதை விட வேண்டும்.

3. பெரும்பாலானோர் மாலை முதல் இரவு வரை அமர்ந்து டி.வி.பார்க்கின்றனர். இதனால் உடலுக்கு உழைப்பு கிடைப்பதில்லை. அப்போது நொறுக்கு  தீனி உண்கின்றனர். இதனால் உடலுக்கு சர்க்கரை நோய் வரும். மாலை முழுவதும் விளையாட்டு என்று கடைப்பிடிக்க வேண்டும்.

4. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுப்படுத்தக்கூடிய, நல்ல கொழுப்பை உருவாக்கக்கூடிய எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். அல்லது  எதாவதொரு வகையில் தினசரி 5 மில்லி ஆலிவ் ஆயில் உடலில் சேர்க்க வேண்டியது கட்டாயம்.

5.அரிசி, சர்க்கரை, உப்பு, மைதா, சாதம், தேங்காய், பால், தயிர் உள்ளிட்ட வெள்ளை உணவு பொருள்களை தவிர்க்க வேண்டும். பேக்கரியில் விற்கும்  எல்லா பொருள்களும் சர்க்கரையை கூட்டக்கூடியது. அதையும் தவிர்க்க வேண்டும்.

6. மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக மாற்றி கொள்ள வேண்டும். 3 வேளை சாப்பிடும் அளவை 5 வேளைகளில் சாப்பிட வேண்டும்.

7. தினசரி 25 முதல் 30 கிராம் வெந்தயத்தை உணவின் மூலம் உடலில் சேர்க்க வேண்டும். அது சர்க்கரையின் அளவு கூடாமல் தடுக்கும். வால்நட்,  பாதாம்பருப்பு கொஞ்சம், நிறைய காய்கறிகள், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்பிள் ஆகிய பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இவையெல்லாம்  கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராது. சர்க்கரை நோய் எந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியம்.
Read more ...

டேபிளில் செல் இடைவெளி

வேர்டில் டேபிள் ஒன்றை அமைத்து, தகவல்களை அமைக்கும் வசதியில் சில அழகு சேர்க்கும் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகையில் செல்களுக்கிடையே சிறிய இடைவெளியை உருவாக்குவது எப்படி எனப் பார்க்கலாம். இந்த இடைவெளி, செல்களையும், அவற்றின் வரிசைகளையும் அழகாக எடுத்துக் காட்டும். இதற்கு டேபிள் எடிட்டர் ஒன்றை வேர்ட் கொண்டுள்ளது. பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக்குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் என்றால், மறைத்துவிடலாம். எனவே செல்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்த நாம் அதனுடன் வரும் டேபிள் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டும். 
1. முதலில் வடிவத்தினை மாற்ற எண்ணும் டேபிளில் எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் Context மெனுவினைக் காட்டும். 
2. இந்த மெனுவில் Table Properties என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே, Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும். 
3. இதில் Table டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். 
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Options என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
5. இதில் Allow Spacing Between Cells என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். 
6. இந்த செக் பாக்ஸின் வலது பக்கம், செல்களுக்கிடையே எவ்வளவு இடம் விடப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 
7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும். 
8. பின்னர், Table Properties டயலாக் பாக்ஸை மூடுவதற்கான ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.

எழுத்தைச் சுருக்க இரு வழிகள்
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 
Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + < என ஒரு வகை.
Ctrl + [ மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது. 8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன. முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக் காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும்.

டெக்ஸ்ட்டுக்கு அதிக இடம் வேண்டுமா?
நீங்கள் எம்.எஸ். வேர்ட் தொகுப்பினைப் பயன் படுத்து கையில் உங்கள் டெக்ஸ்ட்டுக்கு நிறைய இடம் வேண்டும் என எண்ணுபவரா? எதற்கு இந்த தேவையில்லாத மெனு மற்றும் பார்கள் இருக்கின்றன என்று எரிச்சல் படுபவரா? வேர்ட் செட் அப்பில் ஒரு சில டிக் அடையாளங்களை ஏற்படுத்துவதன் மூலமும் நீக்குவதன் மூலமும் இதனை மேற்கொள்ளலாம். அதே போல மீண்டும் வேண்டும் என்றாலும் அவற்றை மீட்டுக் கொள்ளலாம். இதற்கு முதலில் Tools மெனு செல்லவும். பின் அதில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து வரும் டேப் விண்டோவில் View டேபைக் கிளிக் செய்திடவும். இதில் Horizontal Scroll Bar, Status Bar, Vertical Scroll Bar என்ற மூன்று பார்களும் அவற்றின் எதிரே செக் பாக்ஸ்களும் இருக்கும். இதில் எது உங்களுக்குத் தேவை இல்லை என எண்ணுகிறீர்களோ அதில் டிக் அடையாளத்தை எடுத்துவிடுங்கள். பின் வேர்ட் தொகுப்பில் டெக்ஸ்ட் தயாரிக் கையில் அல்லது எடிட் செய்கையில் உங்கள் மானிட்டரில் நீங்கள் டிக் அடையாளம் எடுத்துவிட்ட பார்கள் இருக்காது. இதனால் டெக்ஸ்ட் அடிக்கச் சற்று கூடுதலாக இடம் கிடைக்கும். நீக்கிய இந்த பார்கள் மீண்டும் வேண்டும் என்றால் மீண்டும் இதே வழியில் சென்று வியூ டேப் அழுத்தித் தேவையான பார் களுக்கு முன்னால் உள்ள பாக்ஸ் களில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால் போதும். 

டேபிள் செல் டெக்ஸ்ட் மாற்றம்
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும். 
2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்திடவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பினைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத்திடவும். அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.

டாகுமெண்ட் தொடக்கமும் முடிவும்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். 
அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத் தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
Read more ...
Designed By Published.. Blogger Templates